Title of the document
கோவை; பொம்மலாட்டம் உதவியுடன், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன்.

ஒருபுறம் முக கவசம் அணியாமல், கைகளை முறையாக சுத்தப்படுத்தி கொள்ளாமல், சிலர் அலட்சியமாக பொதுவெளியில் நடமாடுகின்றனர். மறுபுறம், குடும்பத்தையும், குழந்தைகளையும் பிரிந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, உயிரையே பணயம் வைத்து போராடுகின்றனர் மருத்துவர்களும், செவிலியர்களும்.

எல்லாம் சைனாக்காரன் வேலை!

இச்சூழலில், &'பள்ளி குழந்தைகளே... உஷாரா இருந்துக்குங்க; இது சைனாக்காரன் பண்ணி வச்ச வேலை. கர்சீப்ப யூஸ் பண்ணி, நோய் வராம தடுத்துக்குங்க&' என்ற வரிகளுடன் துவங்கும் கானா பாடலுக்கு, பொம்மலாட்டம் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன்.&'&'எனது சொந்த ஊர் பரமத்தி வேலுார்.

கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றதும், கடந்த மூன்று ஆண்டுகளாக, பாடப்புத்தகத்தில் உள்ள செய்யுள் பகுதியை, நமது பாரம்பரிய பொம்மலாட்ட கலை வாயிலாக பாடி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

இது, குழந்தைகளின் மனதில் எளிதாக பதிந்து விடுகிறது,&'&' என்கிறார் இவர்.வீடியோ வாயிலாக, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து கேட்டதற்கு, &'&'நீங்களும் பார்த்து விட்டீர்களா...கொரோனா வைரஸ் பற்றி, எளிய நடையில் உள்ள கானா பாடலுக்கு, பொம்மலாட்டம் மூலம், வீடியோவாக காட்சிப்படுத்தி, சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறேன். வீடியோவை காணும் குழந்தைகள், கொரோனா பற்றி நன்கு அறிந்து கொள்வர்,&'&' என்றார் அந்த பொம்மை தாத்தா.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post