Title of the document
 

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ரூ.35,224க்கு விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று (ஏப்ரல் 10) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,403 ஆக உள்ளது. தங்கம் இறக்குமதியில் இந்தியா உலகின் 2வது பெரிய நாடாக இருந்து வருகிறது. நகை செய்வதற்காகவே தங்கம் அதிக அளவில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு மார்ச் மாதம் கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி 73 சதவீதம் வரை குறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம், பொருளாதார பின்னடைவால் விற்பனை சரிவு, மக்களிடம் வாங்கும் திறன் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் இறக்குமதி குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸ் பரவல், உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் பெரும்பான்மையான நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வைரஸ் பரவலுக்கு அஞ்சி உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கி குவித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வாங்காமல் இருந்தாலும், தினமும் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த ஜனவரி முதல் உயர்ந்து வரும் தங்கம் விலை வருமாறு:

கடந்த 2020, ஜன.1 கிராம் (22 கேரட்) - ரூ.3,746, (24 கேரட்) - ரூ.3,930. 2020, பிப்.1 (22 கேரட்) - ரூ.3,888, (24 கேரட்) - ரூ.4,079. மார்ச் 1 - (22 கேரட்) ரூ.3,986, (24 கேரட்) - ரூ.4,191.ஏப்.1 (22கேரட்) - ரூ.4,167, (24 கேரட்) - ரூ.4,365 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 8 நாட்களில் படிப்படியாக உயர்ந்து ஏப்.8ல் (22 கேரட்) - ரூ.4,309 (ஒரு பவுன் 34,472), ஏப்ரல் 9ல் (24 கேரட்) - ரூ.4,368 (ஒரு பவுன் ரூ.34,944 ) என உயர்ந்துள்ளது. நகைக்கடைகள் மூடிக்கிடக்கின்றன. உலக பொருளாதாரம் பின்னடைவு கண்டுள்ளது. கச்சா எண்ணெய் பேரல் 20 டாலருக்கு கீழ் சரிந்து வருகிறது. ஆனால் தங்கம் மட்டும் விற்பனை, நுகர்வு இல்லாதபோதும் உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்துக்கு விற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post