நீட் தேர்வு மட்டுமல்லாது,
உயர்கல்வி
படிப்புகளுக்கான
அனைத்து தேர்வுகள்
மற்றும் நுழைவுத்
தேர்வுகளை, ஒரு மாத
காலத்திற்கு ஒத்திவைக்க,
மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகம்
முடிவு செய்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,
நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை,
முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லுாரித் தேர்வுகள், கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று டில்லியில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியிருப்பதாவது:
ஜே.என்.யு.,
யு.ஜி.சி.நெட், இக்னோ பிஎச்.டி., பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான
நுழைவுத் தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள், ஐ.சி.ஏ.ஆர்., உள்ளிட்ட
நிர்வாகப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துமே, ஒரு மாதத்திற்கு ஒத்தி
வைக்கப்படும். இவை மட்டுமல்லாது, மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு
உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளுக்கும், தேதி தள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Post a Comment