திருப்பூர்: அனைவரும் விரும்பி அணியும் வகையில், 
திருப்பூர், &'நிப்ட் - -டீ&' ஆடை வடிவமைப்பு கல்லுாரி மாணவர்கள், 
பேஷன் முக கவசங்களை உருவாக்கி அசத்தி உள்ளனர்.
கொரோனா
 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்கள் அனைவரும், முக கவசங்கள் அணிந்து 
வருகின்றனர். பாதிப்பு நீங்கினாலும் கூட, அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு முக 
கவசம் அணிவது கட்டாயமாகும் வாய்ப்பு உள்ளது. இதனால், திருப்பூர், நிப்ட் - 
டீ கல்லுாரி மாணவ - மாணவியர், பேஷன் முக கவசங்களை உருவாக்கி உள்ளனர்.
கல்லுாரி
 தலைமை டிசைனர் பூபதி, பேராசிரியர் யமுனாதேவி வழிகாட்டுதலுடன், ஏழு மாணவ - 
மாணவியர் இணைந்து, 20 வகையான முக கவசங்களை, பிரின்டிங், எம்ப்ராய்டரி, 
சீக்வென்ஸ் என, அலங்கரித்துள்ளனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் 
ராஜாசண்முகம் கூறுகையில், &'&'நிப்ட் - -டீ மாணவர்கள், புதுமையான 
முக கவசம் தயாரித்திருப்பது பாராட்டத்தக்கது.
&'&'எதிர்காலத்தில்,
 ஆடைக்கு இணையான வகையில், முக கவசங்கள் அணிவது பேஷனாகி விடும். 
&'&'மதிப்பு கூட்டு அம்சங்கள் இருப்பதால், வர்த்தக ரீதியாக, 
உள்நாட்டிலும் உலக சந்தையிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்,&'&' 
என்றார்.
Post a Comment