Title of the document
ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை பெற, புதிய விதிகளை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகையைப் பெற, யு.ஜி.சி., நடத்தும் நுழைவுத் தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற வேண்டும்.தேர்வு செய்யப்படுவோருக்கு, மாதந்தோறும் உதவித் தொகையும், கல்லுாரிகள், பல்கலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள தேவையானசெலவுத் தொகையும் வழங்கப்படும்.இதில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான, புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி இனி, உதவித் தொகை பெற ஆண்டுதோறும், 1,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முழு நேர, பிஎச்.டி., அல்லது எம்.பில்., படிப்பவர்களுக்குமட்டுமே, உதவித் தொகை வழங்கப்படும்.அவர்களில், ௪ சதவீதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக இருக்க வேண்டும்.

எம்.பில்., படிப்பவர்களுக்கு, இரண்டு ஆண்டுகள்; பிஎச்.டி.,க்கு, ஐந்து ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.முதல் இரண்டு ஆண்டு களுக்கு, மாதம், 31 ஆயிரம் ரூபாயும்; பின், மூன்று ஆண்டுகளுக்கு, 35 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை வழங்கப் படும்.இது தவிர, செலவுத் தொகையாக மாதம், 10 ஆயிரம் முதல், 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும்.முழு விபரங்களை, யு.ஜி.சி., இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post