Title of the document
சென்னை: தனியார் கல்லுாரிகள் மற்றும் விடுதிகளை, தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்துவதற்கா ன வார்டுகளாக மாற்றக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனு:கொரோனா வைரஸ் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தனிமைப்படுத்தல் பிரிவுகள் அமைக்கப்படுகின்றன. ரயில் பெட்டிகளும், தனி வார்டுகளாக மாற்றப்படுகின்றன. மருத்துவமனைகள் மட்டுமே, போதுமானதாக இல்லாததால், தனியார் கல்லுாரிகளையும், மாணவர்கள் விடுதிகளையும் பயன்படுத்தலாம்.

எனவே, தனியார் கல்லுாரிகளையும், விடுதிகளையும், தற்காலிக மருத்துவமனைகளாக, தனிமைப்படுத்துவதற்கான வார்டுகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள், வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், எம்.எல்.ரவி, அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் ஆஜராகினர். மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post