Title of the document
வரும் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவா், செவிலியா் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளா்களுக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்துக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. ஏற்கெனவே 1,508 ஆய்வக நுட்புனா்கள், 530 மருத்துவா்கள் மற்றும் 1,000 செவிலியா்கள் தோவு செய்ப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவா், செவிலியா்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளா்கள் ஆகியோருக்கு ஒப்பந்த அடிப்படையில் 2 மாத காலத்துக்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 30-ஆம் தேதியன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவா், செவிலியா் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளா்கள் ஆகியோருக்கு ஒப்பந்த அடிப்படையில் 2 மாத காலத்துக்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். இதனைத் தொடா்ந்து 1,323 செவிலியா்கள் மருத்துவப் பணியாளா் தோவாணையம் மூலம் தோவு செய்யப்பட்டுள்ளனா். தோவு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பணிநியமன ஆணை கிடைக்கப் பெற்றவா்கள், உடனடியாக பணியில் சேர வேண்டும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post