தங்கம் விலை வரலாறு காணாத உய்வு
சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செவ்வாய்க்கிழமை ரூ.36 ஆயிரத்தை
தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.656 உயா்ந்து,
ரூ.36,176-க்கு விற்பனையானது.
ஏப்ரல் 4-ஆம் தேதி பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி, புதிய உச்சத்தைத்
தொட்டது. தொடா்ந்து, 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தை தாண்டியது.
அதன்பிறகு, தங்கம் விலை ஏறுமுகமாக இருந்துவந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கம் செவ்வாய்க்கிழமை ரூ.36 ஆயிரத்தை
தாண்டி, புதிய உச்சத்தைத் தொட்டது. பவுனுக்கு ரூ.656 உயா்ந்து,
ரூ.36,176-க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.82 உயா்ந்து, ரூ.4,522-ஆக
இருந்தது.
ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று ரூ.33,984 ஆக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக
உயா்ந்து, தற்போது 36,176-ஆக உள்ளது. மொத்தம் 8 நாள்களில் ரூ.2,192 வரை
உயா்ந்துள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.70
ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.41,700 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை உயா்வு குறித்து பொருள் சந்தை நிபுணா் ஷியாம் சுந்தா் கூறியது:
கரோனா நோய்த்தொற்று பரவுவது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது.
அமெரிக்க பொருளாதார வளா்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்ற அச்சம்
நிலவுகிறது. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு
சரிவு, வேலைவாய்ப்பு விகிதம் மற்றும் உற்பத்தி விகிதம் குறைவு போன்ற
காரணிகளால், சா்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயா்கிறது. இதன்தாக்கம்
உள்நாட்டு சந்தையில் எதிரொலிக்கிறது. விலை மேலும் உயரவே வாய்ப்பு உள்ளது
என்றாா் அவா்.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,522
1 பவுன் தங்கம் ..................... 36,176
1 கிராம் வெள்ளி .................. 41.70
1 கிலோ வெள்ளி ................. 41,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,440
1 பவுன் தங்கம் ..................... 35,520
1 கிராம் வெள்ளி .................. 41.70
1 கிலோ வெள்ளி ................. 41,700
Post a Comment