அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைப்பு - மத்திய அரசு.

Join Our KalviNews Telegram Group - Click Here
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க மத்திய அரசு உத்தரவு. அதன்படி , மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.


மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியர்களுக்கும் 01.01.2020 முதல் வழங்கப்பட வேண்டிய நான்கு சதவீத அகவிலைப்படி வழங்கப்படாது. மேலும் 01.07.2020 & 01.01.2021 முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படியும் வழங்கப்படாது. அதுவரை தற்போதுள்ள 17% என்ற அளவிலேயே நீடிக்கும். ஒரு வேளை 01.07.2021 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட முடிவெடுக்கப்பட்டால் 01.01.2020,01.07.2020 & 01.01.2021 ஆகிய காலங்களுக்கான ஒட்டுமொத்த அகவிலைப்படி உயர்வுகளும் கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். ஆனால் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்திற்கு அகவிலைப்படி உயர்வுக்கான நிலுவை தொகை கிடைக்காது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்