9 நிமிசத்துல , இவ்வளவு கரண்ட் மிச்சமா !!

Join Our KalviNews Telegram Group - Click Here
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்ற பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார்.
வழக்கம் போல இதையும், மக்கள் தவறாக புரிந்துகொண்டு மொத்த மின் இணைப்பையும் அணைக்கக்கூடும் என்று தமிழக மின்சார வாரியம் கருதியது. ஆகையால் மின்விளக்கை மட்டும் அணைக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கி 9 நிமிடங்கள் வரை பல இடங்களில் விளக்குகள் அணைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் அதிக அளவு மின்சாரம் சேமிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின்விளக்குகள் நிறுத்தப்பட்டதால் சென்னையில் மட்டும் 350 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி உள்ளது. தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 2200 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கமணி கூறி இருக்கிறார்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்