Title of the document


மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஏப்ரல் 17ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், மதுரை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 36

பணி வகைகள்:

உதவியாளர், எழுத்தர் என மொத்தம் 36 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி :

ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :




    விண்ணப்பதாரர் 01.01.2019 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
    எஸ்.சி, எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை.
    பொது மற்றும் ஓசி விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.47,600 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.drbmadurai.net/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய நாட்கள் :

    ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 17.04.2020
    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 14.06.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.drbmadurai.net/notification.php அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post