Title of the document
30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) கொடுப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இன்று திருச்சி அருகே தொட்டியம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

பள்ளி இடை நிற்றலில் இந்தியாவில் தமிழ்நாடு தான் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் நிதி ஆயோக் தர குறியீட்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்றார்.

30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடத்தப்பட உள்ள பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும்தான் பொது தேர்வு நடைபெறு என்று கூறியவர், இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்றும், இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post