தமிழகத்தில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவு செய்ய, தமிழக அமைச்சரவை கூட்டம், வரும், 2ம் தேதி நடக்க உள்ளது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், ஏப்., 14 வரை, 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்ய, ஏப்., 11ல், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், ஊரடங்கை நீட்டிக்க முடிவானது. ஆலோசனைஇந்நிலையில், ஏப்., 15 முதல், மே, 3 வரை, நாடு முழுதும் ஊரடங்கை, மத்திய அரசு நீட்டித்தது. தமிழகத்தில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின், பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது.
சென்னை உட்பட, பெரு நகரங்களில் மட்டும், நோய் பரவல் தொடர்கிறது.எனவே, மே, 3க்கு பிறகும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்து வருகிறது.அதேநேரம், நோய் தொற்று இல்லாத பகுதிகளில், ஊரடங்கை தளர்த்தி, நோய் பரவல் உள்ள பகுதிகளில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.இது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம், கொரோனா தடுப்பை கண்காணிக்க அமைக்கப்பட்ட, 12 குழுக்களில் இடம் பெற்றுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அறிவிப்புநேற்று, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும், முதல்வர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசித்தார். அப்போது, தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வதற்காக, வரும், 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.முதல்வர் தலைமையில் நடக்கும், அமைச்சரவை கூட்டத்தில், 3ம் தேதிக்கு பின், ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து, முடிவு செய்து அறிவிக்கப்படும்.
Post a Comment