Title of the document
இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு - பிரதமர் மோடி அறிவிப்பு.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு அடுத்த 21 நாள்களுக்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.




இந்த 21 நாள்களை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்றால் நாம் 21 வருடங்கள் பின் நோக்கிச் சென்று விடுவோம் என்று கூறிய பிரதமர் மோடி,

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சமூகத்திலிருந்து ஒதுங்கி இருப்பது ஒன்றுதான் வழி என்றும் கூறினார். கடந்த 22-ம் தேதி #janatacurfew நாட்டுக்கும் மனிதகுலத்துக்கும் எதிராக எந்தவொரு பிரச்னை வந்தாலும் இந்தியர்கள் எப்படி கைகோத்து ஒன்றாகப் போராடுவார்கள் என்பதைக் காட்டியது என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை  குறித்து முன்னதாக கடந்த வியாழன் அன்று உரையாற்றிய மோடி தற்போது  மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களும் முழுமையான தடையை அறிவித்துள்ளன. இந்நிலையில் மோடியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

மோடி பேசியதாவது: “கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க கடந்த ஞாயிறன்று மக்கள் அனைவரும் ஜனதா ஊரடங்கை கடைபிடித்து தங்கள்  வெளிப்படுத்தினர்.

கொரோனா நோய் தோற்று வேகமாக பரவி வருகிறது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் சவாலாக உள்ளது. கொரோனாவை தடுக்க பெரியவர்கள், வியாபாரிகள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்.




கொரோனாவை தடுக்க ஒரே வழி சமூக தனிமைப்படுத்தல் மட்டுமே. ஜனதா ஊரடங்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே பல்வேறு பகுதிகள் மாநில அரசுகளால் முடக்கப்பட்டுள்ளன.
இன்று  நள்ளிரவு 12  முதல் நாடு முழுவதும் முடக்கப்படும்.

கொரோனாவை தடுக்க இது மட்டுமே சரியான வழியாகும்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் 21 அடுத்த நாட்களுக்கு நாடு முழுவதும் இந்த அமலில் இருக்கும். 21  கஷ்டப்படாமல் நமக்காகவும்  குடும்பத்திற்காகவும்  கொள்ளுங்கள்.

மருத்துவர்களின்  படி அடுத்த 21 நாட்களுக்கு சமூக தனிமைப்படுதலை மேற்கொண்டு கொரோனாவை விரட்டியடிப்போம்.

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரத்தில் நூற்றுக்கணக்கானவர்களை பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 21 நாட்கள் தனித்திருந்தால் மட்டுமே கொரோனா தொற்று சங்கிலியை உடைத்தெறிய முடியும்.




சிறந்த சுகாதார முறைகளை கொண்ட நாடுகளால் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே லட்சுமண ரேகை போல 21 நாட்கள் சமூக தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுங்கள்.

அடுத்த கட்டத்திற்கு  இந்தியா வளர தற்போது  கடைபிடித்தே ஆக வேண்டும். உங்கள் அனைவரையும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தங்குதடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் வரும் 21 நாட்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் கொரோனாவை அழிக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post