Breaking News💥*
*#Coronavirus*
🔹மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு*_
_*🔹பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு*_
_*🔹கொரோனா பாதிப்பு எதிரொலியாக மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது*_
தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட பள்ளிகள் விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதன் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.
அத்துடன் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடுமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை அறிவிக்கப்பட்ட விடுமுறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
Post a Comment