
உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், வரும் கல்வியாண்டில் துவக்கப்பள்ளிகளிலும் கே.ஜி.,வகுப்புகள் துவக்க, பட்டியல் கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.உடுமலை கல்வி மாவட்டத்தில், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கான பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளும் உள்ளன.உடுமலையில், 21 குடிமங்கலத்தில், 9 மற்றும் மடத்துக்குளத்தில், 5 மையங்களிலும் கே.ஜி.,வகுப்புகள் நடத்த கடந்த கல்வியாண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அங்கன்வாடி மையங்களை தேர்வு செய்து அதற்கான இடவசதி, அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்தும் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தி சரிபார்த்தனர்.சரிபார்த்த பின்பு, கே.ஜி.,வகுப்புகளுக்கான சேர்க்கை நடத்த, அறிவிக்கப்பட்டது.
இதன்படி, விடுமுறையில், அனுமதி வழங்கப்பட்ட, அங்கன்வாடி மையங்கள் அமைந்த
பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகளுக்கான சேர்க்கை நடந்தது.தலைமையாசிரியர்கள்,
பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கூட்டங்கள் நடத்தியும்,
சேர்க்கை நடத்தினர். அரசின் குளறுபடிகளால் கே.ஜி., வகுப்புகள்
செயல்படுத்தப்படுவதில், பெற்றோருகக்கு சந்தேக நிலையே
இருந்தது.அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டவுடன், பல
பள்ளிகளிலும் இத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், தற்போது உடுமலை
கல்வி மாவட்டத்தில் விடுபட்ட பள்ளிகளிலும் மையத்தை துவக்க, பள்ளி
நிர்வாகத்தினரின் விருப்பம் கேட்கப்பட்டுள்ளது.மேலும், வரும் கல்வியாண்டில்
துவக்கப்பள்ளிகளிலும் கே.ஜி., வகுப்புகள் துவங்குவதற்கான ஏற்பாடுகளையும்
கல்வித்துறை செய்து வருகிறது. துவக்கப்பள்ளிகளில் அப்பள்ளிக்கு அருகிலுள்ள
அங்கன்வாடி மையக் குழந்தைகள் வயது அடிப்படையில், கே.ஜி., வகுப்புகளை துவக்க
திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலம்,
பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், அங்குள்ள குழந்தைகளின் எண்ணிக்கை
குறித்து பட்டியல் கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது.
Post a Comment