அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பாடுபடும் ஆசிரியர்களுக்கு,
விருது வழங்கி கவுரவிக்கும் புதிய திட்டத்தை, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை
அமல்படுத்தவுள்ளது.அரசுப்பள்ளிகளில் சேர்க்கை சரிந்து வரும் நிலையில்,
மாணவர் சேர்க்கைக்கான தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள
உத்தரவிடப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
வழங்கப்படும் நலத்திட்ட பொருட்கள், கற்பித்தல் முறைகள், பள்ளிகளில் உள்ள
கற்றல் வசதிகளை எடுத்துக்கூறி, கடந்தாண்டை விட, மாணவர் சேர்க்கையை
அதிகரிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால்,
சேர்க்கையை அதிகரிக்க முடியும் என்பதால், சேர்க்கை தொடர்பான பணிகளில்,
அவர்களை ஆர்வமுடன் ஈடுபடுத்தும் வகையில், அவர்களுக்கு விருது வழங்க
திட்டமிடப்பட்டுள்ளது.இதோடு, புதுமைப்பள்ளி, கனவு ஆசிரியர் உள்ளிட்ட அரசின்
விருது திட்டங்களிலும், சிறப்பாக செயல்படுவோருக்கு, முன்னுரிமை வழங்க
முடிவெடுக்கப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் உஷா கூறியதாவது:நாமக்கல்
மாவட்டத்தில், இரண்டே மாணவர்கள் கொண்ட அரசுப்பள்ளிகளில் கூட, 70க்கும்
மேற்பட்ட மாணவர்கள் சேர, விருது வழங்கும் திட்டம் உதவியது.
அதே போல், கோவை மாவட்டத்திலும் பின்பற்றப்படும்.செப்டம்பர் மாதத்தில், மாணவர் சேர்க்கைக்காக சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், அதிக மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை உடைய, வட்டாரத்தில் பணிபுரியும் அலுவலருக்கும், விருது வழங்கப்படும். ஆசிரியர்கள் முயற்சி எடுத்தால், அரசுப்பள்ளிகளின் நிலையை மாற்ற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment