தங்கம் விலை - 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1728 குறைந்தது !!
தங்கம் விலை 2வது நாளாக சரிந்து வருகிறது. சவரனுக்கு ரூ.632 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக விலை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை தங்கம் கிராமுக்கு ரூ.4157க்கு விற்பனையானது. திடீரென்று நேற்று காலையில் தங்கம் ரூ.4020க்கு விற்பனையானது. இதனால், சவரனுக்கு ரூ.1096 குறைந்தது. ஒரே நாளில் இந்த அளவு விலை குறைந்தது. நேற்று மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.7 வரை குறைந்தது. சவரனுக்கு ரூ.56 குறைந்து, ரூ.32,104க்கு விற்பனையானது.
இந்தநிலையில் இன்று காலையிலும் தங்கத்தின் விலை பெருமளவில் குறைந்தது. கிராம் ரூ.3934க்கு விற்பனையானது. இதனால் கிராமுக்கு 79ரூபாய் குறைந்தது. சவரனுக்கு ரூ.632 குறைந்தது. இதனால் இன்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.31,472க்கு விற்பனையானது. இதனால் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1728 குறைந்தது. இது நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Post a Comment