Title of the document
சில நாட்களாக நாம் அதிகமாக கேட்கும் சொற்களில் 144 தடை உத்தரவும் இருக்கிறது. 144 தடை உத்தரவு என்றால் என்ன, யார் பிறப்பிக்கிறார்கள் மற்றும் எப்பொழுது பிறப்பிக்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.




செச்டின் 144

144 தடை உத்தரவு என்றால் என்ன?

பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவது தவறு. மீறி அங்கே நபர்கள் கூடி, பொதுமக்களின் அமைதியை பாதிப்படைய செய்தால் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்.





Post image

யார் பிறப்பிக்கலாம்?

மாவட்ட ஆட்சியர் அல்லது மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் அவர்கள் நிர்வாகம் செய்யும் பகுதிக்குள்ளான இடங்களில் குறிப்பிட்ட நபருக்கு எதிராகவோ, குறிப்பிட்ட நகரத்திற்கு எதிராகவோ இந்த உத்தரவை பிறப்பிக்கலாம்.

மீறினால் என்ன தண்டனை?

இச்சட்டத்தின் பிரிவு 141 முதல் 149ன் படி 144 தடை உத்தரவை மீறினால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது தண்டனைத்தொகை விதிக்கப்படும்.
 ----------------------------------------------------------------------------------------------------------

பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.



குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144 என்றால் என்ன ?

பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது கலவரத்தின் அவசர நிலைகளில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சிஆர்பிசி) பிரிவு 144 தடை உத்தரவு அமலாக்கப்படுகிறது. பிரிவு 144 நடைமுறைப்படுப்பட்ட பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடத்தில் கூடுவது சட்ட விரோதமாக கருதப்படுகிறது.

இந்த அரசாணையை வழங்கும் அதிகாரம் அப்பகுதியின் மாவட்ட மாஜிஸ்திரேட்க்கு உண்டு.இன்டர்நெட் இணைப்பை தடுக்கவும் இந்த உத்தரவு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்த 144 தடை உத்தரவை எப்போதெல்லாம் நடைமுறைப்படுத்தலாம்?

சில குறிப்பிட்ட மக்களால் பொது அமைதிக்கும் ,பொது ஒழுங்கிற்கும் பங்கம் ஏற்படும் என்று யூகம் வந்தால், அந்தந்த இடங்களில் பிரிவு 144-ஐ அரசாங்கம் நடைமுறைப்படுத்தும். இந்த பிரிவின் கீழ், போலீஸ்,துணை ராணுவம் அல்லது பாதுகாப்புப் படையினரைத் தவிர பொது இடங்களில் லத்தி, கூர்மை ஆயுதங்கள் அல்லது துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை எந்த பொதுமக்களும் பொது இடத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.




இந்த பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட எந்த தடை உத்தரவும் இரண்டு மாதங்களுக்கு மேல் நடைமுறையில் இருக்காது. இருந்தாலும் ஒரு மாநில அரசாங்கம் மனித உயிர்களை காப்பாற்றுவதற்காகவோ,கலவரங்களை தடுப்பதற்க்காகவோ, இந்த அரசாணையை முதலில் பிறப்பித்த நாளிலிருந்து அதிக பட்சமாக ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கலாம்.

144 தடை உத்தரவை மீறுவோருக்கு என்ன தண்டனை?

சட்டவிரோதமாகக் கூடுவோர்களுக்கு “கலவரத்தில் ஈடுபடுதல்” என்ற வழக்கில் பதிவு செய்து அதிகபட்சம் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைக்கும் . அந்த சட்டவிரோத கும்பலை கலைக்கும் காவல்துறையை தடுத்து நிறுத்துவதும் சட்டப்படி குற்றம்.

ஊரடங்கு உத்தரவிற்கும்,பிரிவு 144-ன் கீழுள்ள தடை உத்தரவுகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஊரடங்கு உத்தரவு என்பது வேறு, 144 பிரிவு தடை சட்டம் என்பது வேறு.  மிகக் கடுமையான சூழ்நிலைகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன, சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post