Title of the document
IMG_20200316_120614
அனைத்து வகை பள்ளி களில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரையில் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள் ளது . மேலும் , இந்த காலக்கட்டத்தில் , ஒ ருங்கிணைந்த வேலுார் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக ளுக்கு எந்த தேர்வுக ளும் நடத்தக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ் தெரிவித்துள்ளார் .

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இது , தமிழகத் திலும் பரவாமல் தடுக்கும் வகையில் , பல முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது . இதில் ஒன்றாக , தமி ழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரைக் கும் , இன்று முதல் வரும் 31ம் தேதி வரை விடு முறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . இதற்கிடையே , ஒருங் கிணைந்த வேலுார் மாவட் டத்தில் பல தனியார் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்புக்கான தேர்வு களை , வரும் 20ம் தேதி முதல் ஏப்ரல் முதல் வாரம் வரையில் நடத்துவதற்கு திட்டமிட்டு , கால அட்ட வணையையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் , தமிழக அரசின் உத்தரவின்படி விடுமுறை அறிவிப்பு குறித்த எந்த தகவலையும் , தனியார் பள்ளிகள் தரப் பில் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை . இதனால் , தனியார் பள் ளிகள் குறிப்பிட்ட தேதி களில் . தேர்வுகள் நடக்குமா , நடக்காதா என்று விவரம் தெரியாமல் பெற்றோர்கள் குழப்பத் தில் ஆழ்ந்துள்ளனர் .

இதுகுறித்து , முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : அரசு , அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் , நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி கள் , தனியார் மெட்ரிக் பள்ளிகள் , சிபிஎஸ்இ , ஐசிஎஸ்இ பள்ளிகள் என்று அனைத்து வகை பள்ளிகளிலும் எல்கேஜி ( ப்ரிகேஜி உட்பட ) முதல் 5ம் வகுப்பு வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 250 பள்ளிக ளுக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது .

தனியார் பள்ளிகள் தரப் பில் , 1 முதல் 5ம் வகுப் புக்கு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டிருந்தாலும் , தமிழக அரசின் அறிவிப்பின்படி விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தில் எந்த தேர்வினையும் நடத்தக் கூடாது . இதுகுறித்து , தனியார் பள் ளிகளுக்கு சுற்றறிக்கை - அனுப்பப்படும் . இவ்வாறு அவர் தெரிவித்தார் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post