Title of the document
சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை  தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்!



பார்வையில் காணும் தங்களது மனுவில் vacation leave அனுபவிக்கும் அரசுப் பணியாளர்கள் பொறுத்த வரை அவர்கள் அனுபவித்த other kinds of eligible leave மருத்துவ சான்றுடன் கூடிய மருத்துவ ( ஈட்டா ) விடுப்பு மகப்பேறு விடுப்பு , கருசிதைவு விடுப்பு போன்ற ( சம்பளம் மற்றும் படிகளுடன் ) முழு ஊதியத்துடன் கூடிய சாதாரண வகை விடுப்புகளுக்கும் ஏற்ப ஈட்டிய விடுப்பு குறைத்து அவர்களது கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதிகளின்படி சரியான நடைமுறையா என்பதை தெளிவு படுத்துமாறு கோரப்பட்டுள்ளது . தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி விடுமுறை அனுபவிக்கும் பணியாளர்கள் அனுபவித்த ஊதியமில்லா அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே தமிழ்நாடு விடுப்பு விதிகளில் விதி 9 ( a ) ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈட்டிய விடுப்பு குறைக்கப்பட வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

பல ஆண்டுகளாக பலர் ஏற்படுத்திய குழப்பத்திற்கு தெளிவான தெளிவுரைக் கடிதம்!!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post