Title of the document

கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலை வாய்ப்பை பெறும் வகையில் பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய நான்கு இடங்களில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்க அனுமதி அளித்தும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுக்கான  பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நிரந்தரமாக உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

அதனால், தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தில் தங்கள் விவரங்களை இணைத்து 19ம் தேதிக்குள் dsectiondec@gmail.com என்ற இணைய தள முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

3 Comments

Post a Comment

Previous Post Next Post