Title of the document
தொடக்க, நடுநிலை பள்ளியில் காலியாக உள்ள தலைமை, பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒரே நிலையில்10 ஆண்டு பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளத்தில் இருந்து 6 சதவீத உயர்வும், தேர்வு நிலை முடித்து 10 ஆண்டுக்கு பின் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கி, அடிப்படை சம்பளம் 6சதவீதம் உயர்த்தப்படும். இதற்கான உத்தரவை மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்குவதால், காலதாமதம் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க வட்டார கல்வி அலுவலரிடம் இப்பணியை ஒப்படைக்க வேண்டும்.தமிழகத்தில் அரசு அனுமதி பெறுவது பற்றி முறையாக தெரியாமல், 4 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் உயர்கல்வி படித்துள்ளனர். கல்வித்துறை, உயர்கல்வி முடித்த ஆசிரியர்களுக்கு 17 ஏ - படி விளக்கம் கேட்டு, சம்பள உயர்வையும் நிறுத்தியுள்ளனர். இதை தளர்த்தி பின்னேற்பு வழங்கி, ஆசிரியர்களுக்கு தேர்வு எழுதிய நாளில் இருந்து சம்பள உயர்வு வழங்க வேண்டும்.தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது.

அதற்கு பின் ஓய்வு, இறப்பு மூலம் காலியாகும் பள்ளிகளில்தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இக்கோரிக்கையை பள்ளிகல்வி துறை ஆணையாளர் சிஜூ தாமஸிடம் வலியுறுத்திள்ளோம், என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post