முதுநிலை பொறியியல் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்க்கை
பெறுவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்- 2020)
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி
4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளிலும், பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளிலும் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
2020-ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு பிப்ரவரி 29, மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும், இரண்டாம் நாளில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு செய்ய ஜனவரி 31 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. இப்போது விண்ணப்பப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment