Title of the document

*.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,150 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

*.இந்தத் தேர்வை 1.46 லட்சம் பேர் எழுதினர். இதில் தரவரிசை யின்படி முன்னிலையில் இருந்த 3,833 பேருக்குநவம்பரில் சான்றி தழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

*.இதைத் தொடர்ந்து தேர்ச்சி பட்டியலும் வெளியானது. இந்நிலையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு மாவட்டவாரியாக பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று கல்வித் துறை தெரிவித்துள்ளது.

*.இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முது நிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்தேர்வு வாரியத் திடம் இருந்து தேர்ச்சி பட்டியல் பெறப்பட்டுள்ளது.

*.இதையடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு பிப்ர வரி9, 10-ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.

*.எனவே, தேர்ச்சி பெற்ற பட்ட தாரிகள் அனைவரும் உரிய அத்தாட்சி சான்றுடன் கலந்தாய் வில் பங்கேற்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post