Title of the document
"தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமிக்காததால் 600 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன," என தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் குற்றம்சாட்டினார்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:

மாநிலத்தில் 1605 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவு இருந்தது. 'அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் ஓய்வு பெற்றாலோ அல்லது பணியிடம் மாறி சென்றாலோ அந்த இடத்தை காலியாக அறிவிக்க கூடாது; அப்பள்ளியில் அந்த பாடப் பிரிவை மூடிவிட வேண்டும்' என 2007ல் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.இதனால் 13 ஆண்டுகளாக 600 பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் இல்லை. கணக்கு பதிவியலும் தணிக்கையியலும், அலுவலக செயலியல், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின்சாதனங்களும் பழுதுபார்த்தலும், மின்னணு சாதனங்கள், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், துணிகள் தொழில்நுட்பம் உட்பட 10 பாடப் பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, சாதாரணமாக படிக்கும் மாணவர் இதுபோன்ற தொழிற்கல்வி பாடம் படித்து சுயதொழில் துவங்குவது பெரிதும் பாதித்துள்ளது. புதிய கல்வி கொள்கையில் மாணவர் தொழிற் கல்வி பயில மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் மாநில அரசு தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இதற்கான வழிகாட்டுல் முறையை கல்வித்துறை தெரிவிக்க வேண்டும், என்றார். பேட்டியின் போது மாநில தலைவர் ரெங்க நாதன் உடன் இருந்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post