Title of the document

பீகார் மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதாகும் கோபால்ஜி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்த போது புது புது முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழை இலை கழிவில் இருந்து வாழை உயிர் செல், காகித உயிர் செல், அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய கோபோனியம் அலாய் உள்ளிட்டவற்றை உருவாக்கி இருந்தார்.

வாழை மற்றும் காகித உயிர் கலங்களுக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார் கோபால்ஜி. நீர் மின் உயிர் செல், கோபா அலாஸ்கா, போலி பிளாஸ்டிக், லிச்சி ஒயின் உள்ளிட்ட சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தனது முயற்சி பற்றி சொன்ன பின், அவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கும், பின் ஆமதாபாத்தில் உள்ள தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கும் கோபால்ஜி 4 புதிய கண்டுபிடிப்புகளை செய்து காட்டினார்.

இதையடுத்து, அவருக்கு வெளிநாடுகளில் இருந்து அழைப்புகள் வரத்தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கோபால்ஜிக்கு அழைப்பு விடுத்தது. அதேபோல துபாய், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் அழைப்புவிடுத்தன. அனால் அழைப்பு விடுத்த அனைத்து நாடுகளையும் கண்டுகொள்ளாமல், 'இந்தியாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும்' என்ற குறிக்கோளுடன் கோபால்ஜி இருந்து வருகிறார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post