Title of the document
தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெற கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசம் பிப்.17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்  ஒருபகுதியாக மத்திய அரசின் நிதியுதவி பெரும் கல்லூரிகள் மட்டுமே தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார குழுமத்தின் அனுமதி பெறுவது தற்போது வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும்பாலான கல்லூரிகள் நாக் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.

இதனை மாற்றுவதற்காக அனைத்து கல்லூரிகளும் அங்கீகாரம் பெறுவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்து இணைப்பு அந்தஸ்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அதோடு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலைக்கழகம் மூலமாக, ஏஐசிடிஇயிடம் பெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழகம், இந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த பின்னர், ஏஐசிடிஇக்கு அனுப்பும்.

ஏஐசிடிஇ அனுமதி அளித்ததும் கல்லூரிகளுக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் இணைப்பு அந்தஸ்து நீட்டித்து வழங்கப்படும். அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும். அதனடிப்படையில், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்து புதுப்பிப்புக்கான விண்ணப்பங்களை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்டது. இதற்கு ஜனவரி 10 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப். 10-தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்.17-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது.

பிப். 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய கல்லூரிகள் ரூ.25,000 அபராதத்துடன் பிப்.25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய அனுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post