Title of the document
9k%253D%25281%2529

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் சென்னையில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக உள்ள சித்தாண்டி மனைவி, இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் முறைகேடாக முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி வெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உதவி ஆய்வாளரின் சகோதரரான காரைக்குடி சார் பதிவாளரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்ற 200 பேர் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.

இந்த மோசடி வழக்கு விசாரணையை, தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம்  கிராமத்தை சேர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி  தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை என 14 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி இடைத்தரகர்கள் மூலம் ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம் குரூப் 2ஏ தேர்வின் போது முதல் 100 இடங்களில் 37 இடங்களை அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்கள் கடந்த ஓராண்டாக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு எழுதிய நபர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முறைகேட்டிலும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் உதவியுடன் ஜெயகுமார் ஆகியோர் தான் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடைத்தரகராக செல்பட்ட சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த சித்தாண்டி என்பவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார்.

மேலும், அவரிடம் பணம் கொடுத்த அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதிய உள்ளனர். உதவி ஆய்வாளர் சித்தாண்டியிடம் குரூப் 2 தேர்வுக்கு ரூ.15 லட்சமும், குரூப் 4 தேர்வுக்கு ரூ.9 லட்சமும் 200 பேர் நேரடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளதும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மனைவி பிரியா தமிழகத்தில் 5வது இடமும், அவரது சகோதரன் வேல்முருகன் இருந்து தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மட்டும் செய்து இருக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post