இன்று முதல்: SBI ஏடிஎம் சென்றால் செல்போன் அவசியம்.!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
இன்று முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஒடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. SBI's OTP-based ATM cash withdrawal facility has come into system with effect from today

SBI ATM

இன்று முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் ஒடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக இரவு 8மணிக்கு பிறகு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏடிஎம்-ல் இருந்து அதிக பணம் எடுக்க விரும்பினால் உங்கள் செல்போனை கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்

குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும்.
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்

குறிப்பாக எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க விரும்பும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணிறக்கு ஒடிபி அனுப்பப்படும். இந்த கடவு எண்ணைப் பயன்படுத்தி மட்டுமே ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். மேலும் இந்த முறையானது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும், எஸ்பிஐ அல்லாத வேறு வங்கி கிளை ஏடிஎம்களில் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்புகள்


குறிப்பு-1

ரூ.10ஆயிரத்துக்கு அதிக பணம் எடுக்க ஒடிபி கட்டாயம், பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு ஒடிபி அனுப்பப்படும்.
குறிப்பு-2
இந்த ஒடிபி முறை இரவு 8மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே


குறிப்பு-3
வரும் 2020, ஜனவரி 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.


குறிப்பு-4
இந்த முறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கானது: எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மட்டுமே செயல்படும்.

Post a Comment

0 Comments