Title of the document
உலக அளவில் புகழ்பெற்ற கூகுள் மக்களுக்கு இலவசமாக சேவைகளை வழங்குவதால் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இதில் முக்கியமாக கூகுள் குரோம், ஜிமெயில், கூகுள் ஆன்லைன் டாக்குமெண்ட், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், கூகுள் தேடல், Google Pay என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது Google Pay-யின் பயன்பாடு மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. கூகுள் தேடல் மூலம் 92% மக்கள் பயனடைந்து வருவதாக சர்வதேச நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கூகுளே பயன்படுத்துவோர் மில்லியன் கணக்கில் இருப்பதால் தரமான சேவையை அவர்கள் மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.


அந்த வகையில் தற்போது கூகுள் தேடல் வெப்சைட் மூலம் நாம் எப்படி பாதுகாப்பான, நம்பகமான மற்றும் துல்லியமான செய்திகளை தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம்.

கூகுள் குரோமை ஓபன் செய்ய வேண்டும் அதில் google.com என்று கொடுத்து கூகுளின் தேடல் பகுதிக்கு செல்ல வேண்டும்.
பின்பு வலது புறம் கீழே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்ஸை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் வரும் pop-up மூலம் தேடல் செட்டிங்ஸை தேர்வு செய்தால் நமக்கான பாதுகாப்பான தேடலை தேர்வு செய்து கொள்ளலாம்.
இன்னும் பாதுகாப்பான தேடலுக்கு 'Lock Safe Search' என்ற பகுதியின் மூலம் செய்து கொள்ளலாம்.
மீண்டும் தெளிவாக புரிவதற்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் புரியும்.

இதேபோல் மொபைல் போனிலும் செட்டிங்ஸ் சென்று நோட்டிஃபிகேஷன் ஆப்ஷனில் எந்த ஆப் மூலம் தேவையில்லாத விளம்பரங்கள் வருகிறதோ அதனை தடுத்து நிறுத்திவிடலாம். தேவையில்லாத விளம்பரங்களை தவிர்க்கலாம், தெரியாமல் ஆபாச விளம்பரங்கள் வந்தால் கூட தவிர்த்து விடலாம் இதன் மூலம் குழந்தைகள் மற்றும் நண்பர்களிடம் தைரியமாக மொபைல் போனை கொடுக்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post