Title of the document

பொங்கல் பண்டிகைக்கு, கே.வி., பள்ளியில், ஒரு நாள் மட்டுமே விடுமுறை விடப்பட்டதால், மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, நேற்று முன்தினம் முதல், மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு, மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.பொங்கல், திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள் என, மூன்று நாட்கள் கொண்டாட்டத்துக்காக, இந்த விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களும், இந்த மூன்று நாட்கள் செயல்படாது.ஆனால், தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு, பொங்கல் நாளில் மட்டுமே, விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்றும், இன்றும் பள்ளிகள் இயங்குகின்றன.

இந்த இரண்டு நாட்களும், மாணவர்கள் வகுப்புக்கு கட்டாயம் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால், பெற்றோரும், மாணவர்களும், ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக மக்களில் பெரும்பாலானோர், தங்கள் சொந்த ஊர்களில், பொங்கலை கொண்டாடும் நிலையில், கே.வி., பள்ளி மாணவர்கள் மட்டும், சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல், கவலை அடைந்துள்ளனர்.மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும், தமிழகத்தில் செயல்படுவதால், தமிழக அரசின் விடுமுறை நாட்களை பின்பற்றியே இயங்க வேண்டும் என்ற விதிகளை, கே.வி., பள்ளிகள் பின்பற்றுவதில்லை என, பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, கே.வி., பள்ளி நிர்வாகத்தின் மீது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிர்வாகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post