ஒரேநாளில் விடுப்பு எடுக்கும் 5 லட்சம் ஆசிரியர்கள்!!

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307
பள்ளிகளின் ஆசிரியர்கள் 5 லட்சம் பேர் வருகிற ஜனவரி 21ம் தேதி பொது விடுப்பு எடுக்க உள்ளனர்.

உத்தரப்பிரதேச அரசு ஆசிரியர்கள் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளது. இதற்காக அங்குள்ள அரசுத் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதன்படி, தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 5 லட்சம் பேர் ஜனவரி 21ம் தேதி விடுப்பு எடுப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச பிரதாமிக் சிக்ஷா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தினேஷ் சந்திர ஷர்மா இதுகுறித்து கூறுகையில், "அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.

ஆசிரியர்களுக்கு சம அளவில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே அரசுக்கு வைத்தும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரச்னைகள் குறித்து மாநில அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நவம்பர் 21ஆம் தேதி லக்னோவில் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அதன் எதிரொலியாக அரசு எங்களுக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால், இதுவரை எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களது பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

Post a Comment

0 Comments