Title of the document
உத்தரப் பிரதேசத்தில் போலிச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர்கள் வேலைக்கு சேர்ந்துள்ளது தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் மற்றும் பரேலி மாவட்டங்களில் போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களுடன் ஆசிரியர்கள் வேலை பெற்றுள்ளது குறித்து பல்வேறு புகார்கள் குவிந்துள்ளன.

 மாவட்ட கல்வித்துறை அளித்த புகாரின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரு மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் மொத்தம் 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இந்த ஆசிரியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்தது உறுதியானது. எனவே இவர்கள் பணியில் இருந்து கடந்த 2016ல் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பரேலி மாவட்ட அதிகாரி தனுஜா திரிபாதி இதுகுறித்து, 'போலி சான்றிதழ்கள் அளித்த ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இரண்டு மாவட்டங்களில் மொத்தம் 48 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்று ஆசிரியர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post