20 - 35 வயது இருப்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?

Join Our KalviNews Telegram Group - Click Here
1.உடலும் மனமும் பலமாக இருக்கும் வயதுகள் தான் இந்த 20–30. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைக்க வேண்டும்.

2.காதல் வயப்பட ஏற்ற வயதும் இந்த பகுதி தான். காதல் வந்தால் காதல் செய்யுங்கள்.
அந்த காதல் வெற்றி பெற்றால் நல்லது. இல்லாவிட்டால் அதை விட நல்லது. காதல் தோல்விக்கு பின் வரும் மன தைரியம் நிச்சயமாக ஒரு பக்குவப்பட்ட மனிதனை உருவாக்கும்.

3.நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் அதிக கவனம் வேண்டும். வாழ்வின் லட்சியத்தை அடைய ஏற்ற வயது.

4.ஒரு செயலை செய்ய தொடங்கும் முன்பே வெற்றி அடைந்தால் எப்படி இருக்கும் என்று கனவு காண வேண்டும். அது வெற்றியை அடைய ஒரு உந்து சக்தியாக இருக்கும்.

5.தோல்வி அடைந்தால் எப்படி இருக்கும் எனவும் கனவு காண வேண்டும். அப்போது தான் அந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியும்.
முடிந்த அளவுக்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகளை குறைத்து கொள்ள வேண்டும். ஒன்று போனால் இன்னொன்று என இருந்தால், அந்த ஒன்றிற்கான நம்முடைய உழைப்பு குறைவாக தான் இருக்கும். அது தான் இன்னொன்று உள்ளதே என எண்ணத் தொடங்கி விடுவோம்.
6.குடும்பத்தின் வரவு செலவு கணக்குகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
பட்ஜெட் போட தெரிந்து கொள்ள வேண்டும்.

7.பெட்ரோல் டீசல் விலையை மட்டுமல்லாது, காய்கறி விலையையும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

8.வாக்களிக்கும் உரிமையை அடைந்து விட்டோம். யாருக்கு அளிக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.

9.மனிதர்களை படிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் பார்க்கும், பழகும் ஒவ்வொரு மனிதர்களிடமும் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். நல்லவரோ, மோசமானவரோ.

10.அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், வேட்பாளர்கள் பற்றிய அறிவு சிறிதளவேனும் வேண்டும்.
அதிகமாக அரசியலை படித்து விட்டு நாட்டை சீர்திருத்த அரசியலில் போட்டியிட எண்ணினாலும் நல்ல விஷயம் தான். 25 வயது தான் அதற்கு ஆரம்பம்.

11.அடிப்படை உரிமைகள், கடமைகள், மற்றும் சட்டம் பற்றிய அறிவையும் சிறிதளவு வளர்த்துக் கொள்வது நல்லது.

12.சமூக சேவையில் ஈடுபடாவிட்டாலும் சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதையாவது அறிந்து கொள்ள வேண்டும்.

13.செய்தித்தாள் வாசிக்க வேண்டும். முதல் பக்கத்தையும் 6 ஆவது பக்கத்தையும் தொடர்பு படுத்தி பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும்.

14.சுற்றுச்சூழல் பற்றிய அறிவும் கொஞ்சம் வேண்டும்.
வாட்ஸப்ப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏதேனும் forward செய்திகள் வந்தால் டக்கென்று ஒரு swipe செய்துவிட்டு கடந்து போகாமல் அதை வாசித்து, உண்மையா fake செய்தியா என அறிந்து கொள்ள வேண்டும்.
அதை வாசிக்க பொறுமை இருந்தால் புத்தகம் வாசிக்கும் பொறுமையும் வரும்.
15. 29 வயதுடன் இளைஞர் என்ற பதவி போய்விடும்.
பெண்களாக இருந்தால் 28 வயதிற்குள் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு 33 வரை வைத்துக் கொள்ளலாம். அப்படி நடக்கவில்லை எனில் ஊர் வாய்க்கு நாமே அவல் கொடுத்த கதை தான்.
நமக்குள்ளேயே நிறைய கேள்விகளை உருவாக்க வேண்டும். அதற்கு பதில் பிறரிடம் அல்லாது நாமே கண்டு பிடிக்க பழக வேண்டும்.
ரகசியம் என்று ஏதேனும் நமக்கு இருந்தால் நமக்குள்ளேயே வைத்துக் கொள்ள பழக வேண்டும்.

16.மன அழுத்தமோ, கஷ்டமோ, மன உளைச்சலோ என்னவாக இருந்தாலும் பிறரிடம் சொல்லி ஆறுதல் தேடக் கூடாது. நாமாக சரி செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த வயதுகளில் தான் யாரையும் சார்ந்து இருக்காமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
"Don't be emotionally attached with anyone" நமக்கு நாமே இதை சொல்லிக் கொள்ள வேண்டும்.

17.சிறிதளவேணும் பொதுநலத்துடன் இருக்க வேண்டும்.

18.உடல் நலத்தில் கவனம் தேவை. நல்ல உணவு அவசியம்.

1935 வயத்தை தாண்டி விட்டால் இல்லாத நோய்கள் எல்லாம் வரும். இப்போது இருந்தே நல்ல உணவு உண்டு, வருமுன் காத்துக் கொள்வது நல்லது.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்