Title of the document
IMG-20200121-WA0025

10, 12ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள் மற்றும்  தீர்வு புத்தகங்களை தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகங்கள் தமிழகத்தில் 32 இடங்களில் விநியோகம் செய்யப்பட உள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் புதிதாக பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் பாடப்புத்தகங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொண்டு பொதுத்தேர்வுக்கு தயாராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் மற்றும் தீர்வு புத்தகங்களை மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் அச்சிட்டு வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக 12ம் வகுப்பு கணித பாடத்துக்கான தீர்வு புத்தகமும் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி மாதிரி வினாத்தாள் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணக்கு பாடத்துக்கு தீர்வுப் புத்தகம் தமிழ், ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை சுமார் 32 ஊர்களில் விற்பனை செய்ய மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனை போலவே 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் புத்தகங்கள் தலா 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post