Title of the document


தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15 முதல் ஜனவரி 17 வரை விடுமுறை என அரசு அறிவித்து இருந்தது. அதன் பின்னர் 18, 19 ஆகிய தேதிகளில் சனி ஞாயிறு என்பதால் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளான ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதியும் பொங்கல் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை தமிழக அரசு ஏற்காததைடுத்து இன்று வேலை நாளாக இருந்தது

இதனை அடுத்து நாளை போகிப் பண்டிகை என்பதால் நாளையாவது விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து விடாமல் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை குறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக 'ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை விடுமுறை கேட்க வேண்டியதுதானே' என்று கேலியுடன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏன் 14 ம் தேதி. ஜனவரி முதல் தேதி முதல் டிசம்பர் 31 வரை லீவு கேளுங்க. சம்பளம் வீடு தேடி வரும். ஆனா பசங்க உருப்படுவாங்க. https://t.co/96sYsNtxDp
— S.VE.SHEKHER

WebDunia News Direct Link....
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post