School Morning Prayer Activities - 11.12.2019

Join Our KalviNews Telegram Group - Click Here
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 11.12.19

டிசம்பர் 11

இன்று மகாகவி பாரதியார் பிறந்த தினம்.

திருக்குறள்

அதிகாரம்:துறவு

திருக்குறள்:341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

விளக்கம்:

ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

பழமொழி

A little knowledge is a dangerous thing.

 அரை வைத்தியம் ஆபத்தில் முடியும்

இரண்டொழுக்க பண்புகள்

 1. அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.

 2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்

பொன்மொழி

விமர்சனங்கள் இன்றி வெற்றியை சுவைக்க முடியாது. விமர்சனங்களை கடந்து வாழ்வதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.அதுவே லட்சிய வாழ்வைத் தரும்.
            --------கலைவாணர்

பொது அறிவு

1.பைந்தமிழ் தேர்ப்பாகன் என்று சிறப்பித்து அழைக்கப்படுபவர் யார்?

 பாரதியார்

2.மகாகவி பாரதியாரின் முதல் புனை பெயர் என்ன?

 ஷெல்லிதாசன்.

3. ஆங்கில அரசால் தடைசெய்யப்பட்ட பாரதியாரின் வார இதழ் எது?

இந்தியா

English words & meanings

Cardiology – study of the heart. இதயவியல்.இதயம் தொடர்பான கல்வியறிவும் பயிற்சியும் இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது.

Calligraphy - Art of producing beautiful hand writing with special pen or brush. அழகான கையெழுத்தைச் சார்ந்த ஒரு காரியம்.

ஆரோக்ய வாழ்வு

 அரைக் கப் கடுகு எண்ணையை மிதமாக சூடு செய்து காலில் வீக்கம் உள்ள இடத்தில் தினமும் இரண்டு முறை தடவி மசாஜ் செய்தால் நீர்கோவையால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி குறையும்.

Some important  abbreviations for students

BBL - Be Back Later

BBS - Be Back Soon

நீதிக்கதை

நரியின் தேடுதல்

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஒரே குஷி... நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்! என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்.... சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.

இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான். சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா? என்று ஏங்கி வாடுகின்றனர். காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்.

இன்றைய செய்திகள்

11.12.19

* குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பழங்குடியின சிறுமி ஐநா விருது பெற்றார்.

* பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம்: காவலன் செயலியை அறிமுகப்படுத்தி ஆணையர் பேச்சு.

* பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

*ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கர்நாடகாவை 336 ரன்னில் ஆல்-அவுட் ஆக்கியது தமிழ்நாடு.

*இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் மும்பையில் இன்று  நடக்கிறது.

Today's Headlines

🌸The little tribal girl who banns child marriage and encourage them to study was awarded by the United Nations.

🌸 Chennai ranks first for the safety of the women says Police Commissioner when introduce the "Kavalan" app.

🌸 PSLV C-48 will be launching to the space.

🌸 Ranchi Trophy - Karnataka lost it's battle against Tamil Nadu. Tamil Nadu won by 336 runs.

🌸 The match between India and West Indies 3rd and last T-20 is held in Mumbai today.

Prepared by
Covai women ICT_போதிமரம் 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்