புதிதாகப் பரவி வரும் QR code மோசடி - ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களே உஷார்!

Join Our KalviNews Telegram Group - Click Here

QR CODE
சமீப காலங்களில் QR கோடு மூலம் நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. QR கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறையும் பரவலான ஒன்றாக இருக்கிறது. ஆனால், முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் QR கோடை ஸ்கேன் செய்யும்போது நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் பறிபோவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

ஆன்லைன் மூலமே இந்த வகையான மோசடி அதிகளவில் நடைபெறுகிறது. ஆன்லைனில் முகம் தெரியாத நபர்களிடம் பொருள்களை வாங்கும்போதும் விற்கும்போதும் அவர்கள், ``பணம் செலுத்துகிறேன், இந்த QR கோடை ஸ்கேன் செய்யுங்கள்" எனக் கூறினால் கண்டிப்பாக ஸ்கேன் செய்யாதீர்கள். நீங்கள் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொபைலை ஹேக் செய்து அவர்களால் உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும்.

கடந்த சில வாரங்களாக இதேபோல் பணத்தை இழந்த பல பேர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஹைதராபாத்திலும், பெங்களுரிலும் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டியவர்கள் செகண்ட் சேல்ஸ் தளங்களில் பொருள்களைப் பதிவு செய்து விட்டு வாங்குபவர்களுக்காகக் காத்திருப்பவர்கள்தான். QR கோடு மோசடிக்காரர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு விருப்பம் தெரிவிப்பது போலத் தொடங்கித்தான் இந்த மோசடியில் ஈடுபடுகிறார்கள்.

QR கோடு என்பதும் ஒரு மெயில் ஐ.டி போன்றதுதான். ஸ்பேம் மெயிலைத் திறக்க வேண்டாம் என்பதைப் போலத்தான் இதுவும். தெரியாதவர்களிடமிருந்து வரும் QR கோடை ஸ்கேன் செய்யாதீர்கள்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்