Title of the document

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன்(டிச.31) நிறைவடைகிறது. இதுவரை நாடு முழுவதும் 16 லட்சம் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 



அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது.

இதுவரை தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை மாலை வரை விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அவகாசம் இருப்பதால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழாண்டைப் பொருத்தவரை, மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வினை எழுதியிருந்தனா். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தேர்வெழுதியிருந்தனா். அவா்களில் 59,785 போ தோச்சி பெற்றனா்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இணையதளம் முடங்கியதால், கடைசி நாளான இன்று நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பிக்க இயலாமல் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பல நெட் செண்டர்களில் மாணவர்களின் நீட் தேர்வுக்காக விண்ணப்பிக்க மணி கணக்கில் காத்திருந்து, முயற்சித்தும் வெற்றிகரமாக விண்ணப்பத்தை செய்ய இயலாம, இணையதளம் முடங்கி விழி பிதுங்கியது. விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்பார்களா என்று மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post