Title of the document

வட்டார கல்வி அதிகாரியான, பி.இ.ஓ., பதவிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளி கல்வித்துறையில் வட்டார கல்வி அலுவலர் பதவியில், 97 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும் என, நவம்பர், 27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்ய, ஜன., 9 மாலை, 5:00 மணி வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் போதே, ஆன்லைன் வாயிலாக சான்றிதழ்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, அறிவிப்பை முழுமையாக படித்து, விதிமுறைகளை தெரிந்து, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு கால அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், விண்ணப்பத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post