"கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு?"

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408
கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி, 822 கணினி ஆசிரியர் பணிக்கான மறுபோட்டித் தேர்வு ஆன்லைனில் நடந்தது. பெரும் குழப்பங்களுக்கு நடுவே இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலையும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆயிரத்து 560 பேர் இடம்பெற்ற அந்த பட்டியலை ஆய்வு செய்த தேர்வர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். வரிசையாக பல தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானது எப்படி என்றும் ஒரே அறையில் தேர்வு எழுதியவர்கள் மட்டும் தேர்வானது எப்படி சாத்தியம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வர்களுடைய இன சுழற்சி முறையை வெளிப்படையாக அறிவிக்காதது ஏன்? என்றும் அவர்கள் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, அவசரகதியில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியை முடிவு செய்து, உடனடியாக இறுதிப் பட்டியலை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post a Comment

1 Comments

  1. Reefer chemistry CV list it's also same pls cancel entire trb subject

    ReplyDelete