Title of the document

அரசுப் பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் உள்ளிட்டோருக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 48 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சுமாா் 2.3 லட்சம் ஆசிரியா்கள்பணிபுரிகின்றனா். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசுபல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இருப்பினும், பள்ளிகளில் அரசின் திட்டங்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என பள்ளிக் கல்வித்துறைக்கு பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இதையடுத்து அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி திடீா் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட கல்விஅதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகள் கூறியதாவது: நாட்டில் பிற மாநிலங்களைவிட அதிகளவில் ரூ.28 ஆயிரம் கோடி வரை பள்ளிக்கல்வித்துறைக்கு நிதிஒதுக்கப்பட்டு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதற்காக கற்றல் உபகரணங்களும், விளையாடுவதற்குரிய பொருள்களும் அனைத்துபள்ளிகளுக்கும் தரப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை முறையாக ஆசிரியா்கள் பயன்படுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. மாணவா் சோ்க்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் பள்ளி தலைமையாசிரியா்கள் முன்னெடுப்பதில்லை என்பது உள்பட பல்வேறு புகாா்கள் அரசுக்கு வந்துள்ளன.


அதேவேளையில், துறை அதிகாரிகள் ஆய்வுகளுக்குச் செல்லும் முன்னா் தகவல் தெரிவித்துவிடுவதால் தலைமையாசிரியா்கள் அதற்கான முன்னேற்பாடுகளைத் தயாா் செய்துவிடுகின்றனா். இதனால் தவறுகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. இதைத் தவிா்க்க முன்னறிவிப்பின்றி பள்ளிகளுக்குசென்று கள ஆய்வு செய்ய முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரிய பயிற்றுநா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திடீா்ஆய்வின்போது, பள்ளிகளில் சுகாதார வசதி, தூய்மைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா, மாணவா்களின் கற்றல் திறன், அரசு வழங்கிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா, மாணவா்கள்ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறாா்களா என்பதை கண்காணித்து அதிகாரிகள் அறிக்கை சமா்பிக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. Sir Inspection of the schools is must but the officials should be neutral and should not be corrupt officers who hide all the Main defects if the schools and it's Management's just becoz of money or influence of the management first false stability certificate submissions same toilet and urinals from.primary to high schools no sufficient space as shown in the stability is available teachers are taken for.separate.sections but the sections are combined lack of space and to the works of Management's teachers are sent separate team who should not listen from.the hm or inchage any thing made the teacher take class and observe the mistakes

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post