புத்தகத்தை வாசிக்க தெரியாமலேயே மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு ஆசிரியை : கலெக்டர் ஆய்வு -ஆசிரியை பணியிடை நீக்கம்

Join Our KalviNews Telegram Group - Click Here
உத்தரபிரதேசத்தில் புத்தகத்தில் இருக்கும் வார்த்தைகளை வாசிக்க தெரியாத ஆசிரியை பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் ஷிகந்த்பூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் ஆய்வுக்கு சென்றிருக்கிறார். அப்போது, ஒரு வகுப்பறைக்குள் சென்ற தேவேந்திரகுமார், ஆங்கில ஆசிரியையை அழைத்து அவரிடம் ஆங்கில பாடப்புத்தகத்தை கொடுத்து மாணவர்களுக்கு புரியும்படி வாசிக்கச் சொல்லியிருக்கிறார். அப்போது, ஆட்சியருக்கு திடீரென அதிர்ச்சியடைந்தார்.

அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை அவற்றில் ஒரு சில வார்த்தைகளைக் கூட வாசிக்க முடியாமல் அந்த ஆசிரியை திணறியிருக்கிறார். இதைப் பார்த்த ஆட்சியர் கடமையாக எச்சரித்தார். மேலும், படிப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்த ஆட்சியர், ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்யவும் பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். ஆசிரியரை வாசிக்க கோரிய ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்