Title of the document
🏮பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் விடுமுறை ரத்தா? பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் குழப்பம்! என்ற செய்தி நேற்று தந்தி டிவி, புதியதலைமுறை,  சன் நியூஸ் மற்றும் பல ஊடகங்களில் செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அதுதொடர்பாக,  பள்ளிக்கல்வித்துறை, முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

🏮ஜனவரி 16ல் பிரதமர் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம்.வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே பள்ளிகளில் ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை: DSE விளக்கம்

🏮பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி. 16இல் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை.வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே பள்ளிகளில் ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது - முதல்வர் பழனிச்சாமி.

🏮பொங்கல் பண்டிகையான 2020 ஜனவரி மாதம் 16 ஆம் தேதியன்று பிரதமர் மோடி இந்தியா முழுவதும் உரையாற்றவுள்ளார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்கு பள்ளியில் பயின்று வரும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.இந்நிலையில், பொங்கலுக்கு மறுநாளான ஜன.16இல் மாணவர்கள்பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை. பிரதமர்மோடியின் பேச்சை மாணவர்கள் வீட்டில் இருந்தே கேட்டுக் கொள்ளலாம். அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post