தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய ஆசிரியை சாலை விபத்தில் உயிரிழப்பு - தொடர்ந்து ஆசிரியர்களின் உயிரை‌ காவு வாங்கும் தேர்தல் !!

Join Our KalviNews Telegram Group - Click Here
தொடர்ந்து ஆசிரியர்களின் உயிரை‌ காவு வாங்கும் தேர்தல்...
கண்ணீர் அஞ்சலி.செங்கம் ஒன்றியம் மேல்புழுதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த திருமதி.வி.முத்துக்கமலி ஆசிரியை 27/12/2019 அன்று தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய போது சாலை விபத்து ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட  கிளை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.

தேர்தல் பணிகளுக்குச் சென்று திரும்பும் ஆசிரியர்கள் விபத்துக்குள்ளாகி உயிரை இழக்கும் சம்பவங்கள் தொடர்வது மிகுந்த மனவலிகளை ஏற்படுத்துகிறது. வாக்குப் பதிவு முடிந்தபின் வாக்குப்பெட்டிகளை எடுக்க ஏற்படும் காலதாமதங்கள், அதிக இரவில் பயணம் செய்து திரும்பும் நிலையை ஏற்படுத்துகிறது. இவைகளில் பல காரணங்கள் விபத்துக்களை ஏற்படுத்துகிறது. இவைகளை தவிர்க்க, வாக்கு மையங்கள் அடங்கிய Zonal பகுதிகளை கூடுதலாக்கி, விரைவாக வாக்குப் பெட்டிகளை எடுக்க தேர்தல் ஆணையம் முன்வரலாம்.

இதனால் அதிக இரவில் தேர்தல் பணியாற்றுவோர் வீடு திரும்ப பயணம் செய்வது தவிர்க்கப்படும். அல்லது தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு குறிப்பாக பெண் பணியாளர்கள் பாதுகாப்பாக இல்லம் திரும்ப உரிய பாதுகாப்பு வசதிகளை தேர்தல் ஆணையம் செய்திட வேண்டும். யார் எப்படிப் போனாலென்ன, எங்களுக்கான வேலை ஆகிவிட்டது என எண்ணி செயல்பட்டால் தேர்தல் பணியாற்றுவோர் தொடர்ந்து விபத்துகளில் சிக்குவது தொடர்கதையாகிவிடும்.

தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் நலன் விரும்பும் சமூக ஆர்வலர்கள் இதனை வலியுறுத்த வேண்டும்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

5 கருத்துகள்

 1. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
  இந்த சகோதரியின் இழப்பு கடைசியாக இருக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. இது மட்டுல்ல. நானும் ஒரு பெண் ஆசிரியை. எங்கள் பகுதியில் குடிநீர் உணவு எதுவும் கிடைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 4. உயிர் பிலைத்ததே பெரும்பாடு.

  பதிலளிநீக்கு
 5. இரண்்டு சக்்கரங்்களில்் மட்்டுமே செல்்லக்ல்கூடிய பேருந்்தே இல்்லாாத ஊருக்்கு பெண்்களை போடுவது அநியாாயம்் அல்்லவாா? இதை யாார்் கேட்்பது... கடவுள்் தாா்் கேட்்கணும்்..

  பதிலளிநீக்கு