Title of the document


யாரவது உங்கிட்ட போனை சார்ஜ்ல போடுறதுக்கு முன்னாடி பேட்டரியை முழுசா யூஸ் பண்ணுங்கன்னு சொல்லிருக்காங்களா?? அந்த காலமெல்லாம் மலையேறி போச்சுங்க.. முன்னால இருந்த நிக்கல் பேட்ட்டரில தான் அந்த மாதிரி செஞ்சா பேட்டரி ரொம்ப நாள் வரும்.

இப்போ இருக்குற அநேக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்ல லித்தியம் பேட்டரி தான் இருக்கு. அதை முழுசா உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. எப்போ வேணும்னாலும் சார்ஜ் போடலாம். அதுதான் போனுக்கும் நல்லது. அதேபோல போன் அதிகமா சார்ஜ் ஆகவும் வாய்ப்பே கிடையாது. அதனால தூங்கும்போது பயப்படாம சார்ஜ்ல போடலாம்.

எவ்வளவு சார்ஜ் ஏத்தனும்னு போனுக்கு தெரியும். சூடான இடத்துலயும், ரொம்ப சூட ஆகுறமாதிரி போனை வச்சுக்காம இருந்தா போதும், பேட்டரி கெட்டுப்போகாது.

Tips: நெட்வொர்க் சரியாக இல்லாத இடங்களில் நீங்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட்போன் ஆன்டெனா அதிகப்படியான பேட்டரி பயன்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதால் அதுபோன்ற நேரங்களில் மொபைலை ஏர்பிளேன் மோடுக்கு மாற்றிவிடுங்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post