அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகள்

Join Our KalviNews Telegram Group - Click Here
அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர் தினமும் அனுப்புவதை ஊக்கப்படுத்த, ஒவ்வொரு குழந்தைக்கும், இரண்டு வண்ண சீருடைகள் வழங்கப் படுகின்றன.

ஆண் குழந்தைகளுக்கு, டிரவுசர், சட்டை; பெண் குழந்தைகளுக்கு, 'பிராக்' வழங்கப்படுகிறது.இந்த திட்டம், 17 மாவட்டங்களில், தற்போது செயல்படுத்தப்படுகிறது.

இம்மாவட்டங்களில், 243 ஒன்றியங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு வரும், 6.25 லட்சம் ஆண் குழந்தைகள், 5.98 லட்சம் பெண் குழந்தைகள் என, மொத்தம், 12.23 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த ஆண்டு வண்ண சீருடை வழங்கப்பட உள்ளது.இதற்காக, 16.04 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இலவச வண்ண சீருடை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டருக்கு விண்ணப்பிக்க, வரும், 30ம் தேதி கடைசி நாள் 🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்