முதல்வர்களுக்கு, வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

Join Our KalviNews Telegram Group - Click Here
ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் முதல்வர்களுக்கு, வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பள்ளி கல்வித்துறையின் கட்டுப் பாட்டில், 50க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்திய பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், உள் கட்டமைப்பு வசதி மற்றும் இதர செலவுகளுக்கு, அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் ஆசிரியர்களின்எண்ணிக்கை, நிதி உதவியின் அளவு, கல்வி கட்டணம் போன்றவற்றை நிர்ணயிக்கும் வகையில், வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சென்னை, எழும்பூரில்உள்ள, அரசு பெண்கள் மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில், இந்த கூட்டம் நடக்கும். இதில், ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்