Title of the document
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறி விப்பால் இதுவரை படிக்காத அரசு பாட புத்தகங்களை முழுமை யாக படிக்க வேண்டிய கட்டாயம் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே பொதுத்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு வெளி யிட்டு இருந்தால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்காது என தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 5-ம் வகுப்புக்கு ஏப்ரல் 15 முதல் 20-ம் தேதி வரையும், 8-ம் வகுப்புக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறை அமலில் உள்ளது. ஒவ்வொரு பருவத்துக்கும் தனித் தனியே பாடப்புத்தகங்கள் வழங் கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படு கின்றன. ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முப்பருவத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப் படும் என தேர்வுத் துறை தெரி வித்துள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்கள் தற்போது தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்புகளைத் தவிர இதர பிரிவுகளுக்கு அரசு பாடப்புத்தகங்களை முழுமையாக பயன்படுத்துவதில்லை. தமிழ் தவிர ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய இதர பாடங்களுக்கு சிபிஎஸ்இ, ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பிற பாடத்திட்ட புத்தகங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
ஒருசில பாடங்கள் மட்டுமே அரசின் புத்தகங்கள் வழியாக நடத்தப்படும். மேலும், மாணவர் களுக்கான தேர்வுகளும் பிரத்யே கமாக வினாத்தாள்கள் தயாரிக் கப்பட்டு நடத்தப்படுகின்றன.
தற்போது 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பால் முப் பருவ பாட புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து கடந்த 2 பருவத்தின் பாடங்களையும் விரைவாக நடத்தி முடிக்க பள்ளி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
இதனால் அரசு பாடப்புத்தகங் களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவசர, அவசர மாக பாடங்களை நடத்திவரு கிறோம். அரையாண்டுத் தேர்வு தொடங்கியதால் விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை வைத்து பாடத்திட்டத்தை முடிக்க கணிச மான பள்ளிகள் திட்டமிட்டுள்ளன.
மறுபுறம் கல்வித் துறையின் புதிய பாடத்திட்டம் கடினமாகவும், அதிகமாகவும் இருக்கிறது. போது மான அவகாசம் இல்லாததால் மேலோட்டமாகவே பாடங்களை கற்பிக்கிறோம். இதனால் மாணவர் கள் பாடங்களை புரிந்துக் கொள் வதில் பெரிதும் சிரமம் அடைகின் றனர். பொதுத்தேர்வு குறித்த அச்சமும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், குறுகிய காலத்தில் முப்பருவ புத்தகங்களையும் படிப் பது குழந்தைகளுக்கு சுமையாகி மனரீதியான பாதிப்புகளை உரு வாக்கும். எனவே, நடப்பு ஆண்டு மட்டும் தனியார் பள்ளிகள் பயன் படுத்தும் பாட புத்தகங்களில் இருந்து வினாத்தாள்களை வடி வமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக தனியார் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தலைவர் நந்தக்குமார் கூறியதாவது:
தமிழக அரசின் கடந்தகால பாட புத்தகங்கள் சிறப்பானதாக இல்லை. இதனால் மாணவர்களை திறம்பட உருவாக்கும் வகையில் தனியார் பள்ளிகள் வேறு பதிப் பக பாட புத்தகங்களை பயன்படுத் துகின்றன. இவற்றில் கணிசமான புத்தகங்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரமும் இருக்கிறது. அந்தப் புத்தகங்கள் வழியாக பாடங்களை போதித்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.
தற்போது அரசின் புதிய பாடத் திட்டம் சிறந்தமுறையில் இருந்தா லும், புத்தகங்கள் உரிய காலத்தில் கிடைப்பதில்லை. இதனால் தனி யார் பள்ளிகள் வழக்கம்போல பிற பதிப்பக புத்தகங்களை வாங்கு கின்றனர். கல்வி ஆண்டு தொடக் கத்திலேயே பொதுத்தேர்வு அறி விப்பை தமிழக அரசு வெளியிட்டு இருந்தால் குழப்பமான சூழல் ஏற்பட்டிருக்காது. எனவே, மாணவர் கள் நலன்கருதி பொதுத்தேர்வை அடுத்த கல்வி ஆண்டு முதல் நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post